பிறந்த தேதி: கூடும் 16, 1986
பிறந்த இடம்:ஐக்கிய அமெரிக்கா
இடம்: ஐக்கிய அமெரிக்கா
தேசிய: இத்தாலியர்கள் - 25%, ஐரிய மக்கள் - 25%, செரோக்கீ - 25%, பிரஞ்சு - 25%
பிறந்த இடம்:ஐக்கிய அமெரிக்கா
இடம்: ஐக்கிய அமெரிக்கா
தேசிய: இத்தாலியர்கள் - 25%, ஐரிய மக்கள் - 25%, செரோக்கீ - 25%, பிரஞ்சு - 25%
மேகன் டெனிஸ் ஃபாக்ஸ் (1986வது வருடம் மே 16 பிறந்தவர்) ஒரு அமெரிக்க நடிகை மற்றும் விளம்பர அழகி. அவர் 2001வது ஆண்டு தொலைக் காட்சியிலும், திரைப்படங்களிலும் பல சில்லறை வேடங்களுடன் தமது நடிப்புத் தொழிலைத் துவங்கினார். பிறகு ஹோப் அண்ட் ஃபெய்த் என்னும் நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப வரும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். 2004வது ஆண்டு, கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ டீனேஜ் டிராமா க்வீன் என்னும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்ததுடன் தனது திரை வாழ்க்கையைத் துவங்கினார். 2007வது வருடம், அவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் என்னும் மாபெரும் வெற்றித் திரைப்படத்தில் ஷியா லாபிவௌஃப் கதாபாத்திரத்தின் காதலியாக மிக்கேலா பேன்ஸ் என்னும் வேடம் அளிக்கப் பெற்றார். இது அவருக்கு ஒரு கட்டுடைத்த வெற்றிக் கதாபாத்திரமான அமைந்து பல டீன் சாய்ஸ் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். 2009வது வருடம் இதன் இணைத் தயாரிப்பில், ஃபாக்ஸ் தமது வேடத்தை மீண்டும் ஏற்று நடித்தார்.Transformers: Revenge of the Fallen 2009வது வருடத்தின் பிற்பகுதியில், ஜென்னிஃபர்'ஸ் பாடி என்னும் திரைப்படத்தில் முதன்மையான தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஃபாக்ஸ் ஒரு பாலியல் குறியீடு என்று கருதப்படுகிறார். இவர் அடிக்கடி மென்ஸ் மேகசீன் பத்திரிகையின் "கவர்ச்சி மிக்கவர்கள்" பட்டியலில் இடம் பெறுகிறார். 2007.2008 மற்றும் 2009 ஆகிய வருடங்களில் மாக்சிம் பத்திரிகையின் வருடாந்திர கவர்ச்சியான 100 பேர் பட்டியலில் இவர் முறையே #18, #16, மற்றும் #2 இடங்களைப் பெற்றார்; 2008வது வருடம், எஃப்ஹெச்எம் வாசகர்கள் இவருக்கு "உலகிலேயே மிகுந்த பாலியல் கவர்ச்சி கொண்ட பெண்" என்று வாக்களித்தனர். 2008வது வருடம் மூவிஃபோன் பத்திரிகையின், "25 வயதுக்கு உட்பட்ட 25 கவர்ச்சி மிகு நடிகர்கள்" பட்டியலில் முதலாம் இடத்தை அடைந்தார். 2004வது வருடம், ஃபாக்ஸ் பெவர்லி ஹில்ஸ் 90210 புகழ் ப்ரியான் ஆஸ்டின் கீரின் என்னும் நடிகரை ஹோப் அண்ட் ஃபெய்த் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்ததாகக் கூறப்பட்டது முதல், அவருடன் ஒன்றாகச் சுற்றத் துவங்கினார். அதிலிருந்து, இவர்கள் இருவருக்கும் தொடர்வதும் முறிவதுமான ஒரு உறவு இருந்து வருகிறது.
Комментариев нет:
Отправить комментарий